உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இரண்டு விவசாயிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினருக்கு அவர்கள் ராம் சங்கர் (50), தேஷ் ராஜ் பால் (48) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் விவசாயிகளின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த விவசாயிகள் தங்களது குடும்பத்தினரிடம் வயல் வெளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர்கள் வயல் வெளிக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
தற்போது காவல் துறையினர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் மீட்பு!