டெல்லி: வடக்கு டெல்லியின் சராய் ரோஹில்லாவில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் 19 வயது இளைஞனை செல்போனைத் திருடியதா பிடித்து கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”ஷாஜதா பாக் சாலையில் உடம்பில் பலத்த காயங்களுடன், தலை முடி வெட்டப்பட்டு ஒரு சடலம் கிடப்பதாக சராய் ரோஹில்லா காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்தப்பட்ட விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இசார் எனும் 19 வயது இளைஞன் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்து கைப்பேசி ஒன்றைத் திருடியது தெரியவந்தது.
அப்போது அந்த தொழிற்சாலையிலிருந்த கியானி என்பவர் இளைஞனைப் பிடித்து தொழிற்சாலைக்கு வெளியே இழுத்துச் செல்கிறார். அங்கு கியானி மற்றும் சிலர் இசாரை தங்கள் பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பெல்டால் கடுமையாக தாக்கினர். இதனால் படுகாயமடைந்த இசார் உயிரிழந்தார்” என தெரிவித்தனர்.
பின்னர் காவல் துறையினர் முக்கிய குற்றவாளியான கியானி மற்றும் மற்ற குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கியானி மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து இசாரை இரக்கமின்றி தாக்கியதாகவும், அவருக்கு பாடம் கற்பிப்பதற்காக தலைமுடியை வெட்டியதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, கைது செய்யப்பட்வர்கள் மீது ஐபிசி பிரிவுகள் கொலை, பொது நோக்கம் என மூன்று ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச்சென்ற 10 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு