உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விரிவாக எடுத்துரைத்தார். செய்தியாளர் சந்திப்பில் தூதர் இகோர் பேசியதாவது," உக்ரைன் நாட்டின் ரஷ்யா நடத்திய போர் தாக்குதல் காரணமாக 16 குழந்தைகள் உள்பட நூற்றுக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, போரில் ரஷ்ய தரப்பிலும் 5,300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. சர்வதேச நாடுகளிடம் உக்ரைன் அரசு போர் நிறுத்தத்திற்காக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. சர்வதேச நாடுகள் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர வேண்டும் என உக்ரைன் நாட்டின் சார்பாக வலியுறுத்தப்படுகிறது. போர் காரணமாக இதுவரை நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் இந்த எண்ணிக்கை 70 லட்சம் வரை உயர அபாயம் உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதிகளில் வரிசைகட்டி நிற்கும் அவல சூழல் நிலவுகிறது. அமைதிப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த பின்னரும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது" எனப் பேசினார்.
இதையும் படிங்க: உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய விமானம் சேதம்