டெல்லி: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து பலரும் வெளியேறிவருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்திய விமானப்படை விமானம் மூலம் 78 இந்தியர்கள் இந்தியா அழைத்துவரப்பட்டனர். டெல்லி விமான நிலையம் வந்த அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் விமானத்தில் பயணிக்க கரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ள ஒன்றிய அரசு, ஆப்கனில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக அந்நாட்டிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆப்கனில் இருந்து வரும் மக்கள் தங்களை 24 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலிபான்களை அலறவிடும் 'பன்ஜ்ஷீர்' மாகாணம்... அசைக்க முடியாத கோட்டை!