ETV Bharat / bharat

Karnataka Result: 15 அமைச்சர்கள் தோல்வி முகம்.. கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு! - கர்நாடக தேர்தல் 2023 முடிவுகள்

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாஜக அமைச்சர் 15 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Karnataka Elections
Karnataka Elections
author img

By

Published : May 13, 2023, 12:29 PM IST

Updated : May 13, 2023, 1:12 PM IST

பெங்களூரு : கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 113 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தொகுதிகளில் பாஜக அமைச்சர் வேட்பாளர்கள் பின்தங்கி உள்ளனர். இரண்டு தொகுதியில் போட்டியிட்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா, பத்மநாபநகர் தொகுதியில் முன்னிலையிலும், கனகபுரா தொகுதியில் பின்தங்கியும் உள்ளார்.

அமைச்சரவையின் முக்கிய துறையான சுகாதாரத் துறையை கவனித்து வந்த டாக்டர் கே. சுதாகர், சிக்கபள்ளூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து உள்ளார். அவரைப் போல் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ், ஹசகோட் தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

அதேபோல் இரண்டு தொதியில் போட்டியிட்ட வீட்டு வசதித் துறை அமைச்சர் வி.சோமண்ணா, சாமராஜ்நகர், மற்றும் வருணா ஆகிய இரண்டிலும் பின்தங்கி உள்ளார். நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கோவிந்த கரஜோலா முதோல் தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளார். போக்குவரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமமுலு, பெல்லாரி கிராமப்புற தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

அதேபோல் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஜே.சி. மதுசாமி, சிக்கநாயக்கனஹள்ளி தொகுதியிலும், தொழில்துறை அமைச்சர் முருகேச்சா பீலகி தொகுதியிலும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், யசவந்தபுரா தொகுதியிலும், விவசாயத் துறை அமைச்சர் பி.சி. பாட்டீல், ஹிரேகுரூ தொகுதியிலும் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.சி. நாராயண கவுடா, கே.ஆர் பீட் தொகுதியில் பின்னடவை சந்தித்து உள்ளார். முதல் நிலைத் துறையை கவனித்த பி.சி நாகேஷ், திபூர் தொகுதியில் பின்னடவை சந்தித்து உள்ளார். குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹலப்பா அசார், யாலபுர்கி தொகுதியில் பின்தங்கி உள்ளார்.

பாஜக அமைச்சரவையில் ஏறத்தாழ 15 அமைச்சர் வேட்பாளர்கள் பின்தங்கி உள்ளார். அதேநேரம் உள்துறை அமைச்சர் அரக ஞனேந்திரா, உயர்கல்வித் துறை அமைச்சர் சி.எம் அஸ்வத் நாராயண், பி.டபிள்யூ.டி. அமைச்சர் சிசி பாடீல் நாரகுண்டா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சிவ்ராம் ஹெப்பர், நகர்ப்புற வளர்ச்சித் துறை பைரதி பச்வராஜ், உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்த அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Karnataka Result Live Update: கர்நாடகாவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.. நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

Last Updated : May 13, 2023, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.