கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் பஸ்சின் மேதினிபூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஜெய்ஜித். 8ஆம் வகுப்பு படிக்கும் ஜெய்ஜித், தன் விருப்பம் போல் புதுவிதமாக முடி வெட்டிக் கொண்டு வீடு திரும்பி உள்ளான். இதைக்கண்ட அவனது தந்தை ஷியாம்படா பூரியா கோபமடைந்து, படிக்கும் மாணவன் வெட்டக் கூடிய முறையா இது என்று ஜெய்ஜித்தை திட்டி, அடித்ததாக கூறப்படுகிறது.
தந்தை அடித்த விரக்தியில் மாணவன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் 2ஆவது மாடிக்கு சென்ற மாணவர் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜெய்ஜித்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி மதுபான வழக்கு: தெலங்கானா முதலமைச்சரின் மகளிடம் சிபிஐ விசாரணை