தாலிபான் அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்ட விவகாரத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது உபா சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காமரூப், பார்பேட்டா, துப்ரி, கரீம்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும், தாரங், சாச்சார், ஹைலாகன்டி, தெற்கு சல்மாரா, கோல்பாரா, ஹோஜய் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநிலத்தின் மூத்த காவல் அலுவலர் கூறுகையில், சமூக வலைதளத்தை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. ஏதேனும் தேச விரோத பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்றும் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான அம்சங்கள் சமூக வலைதளத்தில் உலாவுகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.
இதுபோன்ற பதிவுகளை மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் இணைகிறார் அமலாக்கத் துறை இணை இயக்குநர்?