ETV Bharat / bharat

ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்: தந்தையின் கொலை சதியில் இருந்து துரிதமாக மீண்ட 13 சிறுமி!

ஆந்திர மாநிலத்தில் சொந்த மனைவி மற்றும் இரு மகள்களையும் ஆற்றில் தள்ளி கொல்ல முயன்று, தப்பிச் சென்ற தந்தையை காவல் துறையினர் குழு அமைத்து தேடி வருகின்றனர். இந்த கொலை முயற்சியில் துரிதமாக செயல்பட்ட சிறுமி அனைவரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்
ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்
author img

By

Published : Aug 7, 2023, 9:25 PM IST

ஆந்திராவில் அரங்கேறிய வெறிச்செயல்

ஆந்திரா: மனைவி மற்றும் தனது இரு மகள்களை கோதாவரி ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற தந்தையின் வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், சொந்த தந்தையின் கொலை முயற்சியில் இருந்து துரிதமாக மீண்ட சிறுமியின் தைரியத்தை காவல் துறையினரும் பொது மக்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபள்ளி பகுதியைச் சேர்ந்தவர், புப்பாலா சுஹாசினி(36). திருமணமான இவருக்கு, கீர்த்தனா என்ற 13 வயது மகள் இருந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர்.

கூலித்தொழிலாளியான சுஹாசினி, தனது மகள் கீர்த்தனாவுடன் தனித்து வாழ்ந்து வந்த சமயத்தில், பிரகாசம் மாவட்டம், தர்ஷியைச் சேர்ந்த உலவா சுரேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களின் நட்பு திருமணத்தில் முடிந்த நிலையில், இவர்களுக்கு ஜெர்ஷி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சுஹாசினி மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் இடையில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

கருத்து வேறுபாட்டினால் மனமுடைந்த சுரேஷ், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். என்ன வழி என்று யோசித்த நிலையில், மூவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை மாலை, ராஜமகேந்திராவரத்திற்கு துணி வாங்கச் செல்வது போல் அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் ராஜமகேந்திராவரத்திற்குச் செல்லாமல், இரவு முழுதும் வேறு வழிகளில் சென்று இறுதியாக, கோதாவரி ஆற்றின் அருகே உள்ள கௌதமி பழைய பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கௌதமி பழைய பாலத்திற்கு அருகே சென்று மூவரையும் செல்ஃபி எடுக்க வற்புறுத்தியுள்ளார். இவரின் திட்டத்தை அறியாத மூவரும் பாலம் அருகே சென்று செல்ஃபி எடுத்துள்ளனர். நொடிப் பொழுதில் மூவரையும் இரக்கமே இல்லாமல், கோதாவரி ஆற்றுக்குள் தள்ளிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

சுஹாசினி மற்றும் ஒன்றரை வயதான ஜெர்ஷியும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சுதாரித்துக் கொண்ட கீர்த்தனா பாலத்தின் கீழ் இருந்த பைப்பினை பிடித்துக் கொண்டார். தொங்கிய நிலையில் இருந்த கீர்த்தனா தனக்கு உதவக்கோரி கூச்சலிட்டுள்ளார். பின்னர் தன்னிடம் தொலைபேசி இருந்ததை அறிந்த கீர்த்தனா, துரிதமாக செயல்பட்டு காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை மற்றும் மீட்பு துறையினர் பைப்பில் தொங்கிய கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தாய் சுஹாசினி மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஜெர்ஷி இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் அதிகாரி ரஜினிகுமார், "இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இரு குழுவாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக இருட்டில் பாலத்தின் பைப்பில் தொங்கியபடி இருந்த சிறுமியின் இந்த துணிச்சலான செயல் வெகுவாகப் பாராட்டுக்குரியது.

தக்க சமயத்தில் சிறுமி ரவுலபாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தை அணுகியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.ஐ. வெங்கடரமணா குழு, துரிதமாக செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

மேலும் காவல் துறையினர் இரு குழுவாக பிரிந்து, ஒரு குழு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடலை தேடும் பணியிலும், மற்றொரு குழு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட உலவா சுரேஷை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்" என்று கூறினார். ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுமியின் இந்த தைரியமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி நாடாளுமன்ற திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய சோனியா மற்றும் ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.