கரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் இந்தாண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்துசெய்து அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து விரைவில் முடிவுசெய்யப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. தமிழ்நாடு, ஒடிசா, இமாச்சாலப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.