மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று(ஜூலை 5) பெரும் குழப்பமான சூழல் நிலவியது. அங்கு ஆளும் சிவசேனா கூட்டணி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியான பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட விவாதம் அமளியில் முடிந்தது.
இதையடுத்து பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்குச் சென்று கூச்சல் ஏற்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 12 உறுப்பினர்களை ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இயலாமையைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஜனநாயகத்திற்குப் புறம்பாக, ஆளும் அரசு இடைநீக்கம் செய்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: மோடி எஃபக்ட்: வேலையை துறந்து டீ கடை வைத்த பொறியாளர்