மலப்புரம்(கேரளா): 114 ஆண்டுகள் பழமையான நிலாம்பூர் தேக்கிற்கு ஏலத்தில் ரூ.39.25 லட்சத்துக்கு கிடைத்தது. இது கேரள வனத்துறை வரலாற்றில் இல்லாத விலையாகும். இந்த தேக்கு மரத்தின் மூன்று பாகங்களையும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அஜீஷ் என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.
கேரளா மாநிலம், மலப்புரத்தில் நீலாம்பூர் தேக்கு மரம் ரூ.39.25 லட்சத்திற்கு ஏலம் போனது. கேரள வனத்துறையின் வரலாற்றில் இவ்வளவு தொகைக்கு நீலாம்பூர் தேக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை. நீலாம்பூர் தேக்கு சர்வதேச சந்தையில் புகழ்பெற்றது.
நீலாம்பூரில் உள்ள வனத்துறையின் அருவக்கோடு நெடுங்காயம் டிப்போவின் தோட்டத்தில் இருந்து காய்ந்த தேக்கு மரத்தின் மூன்று பாகங்கள் கடந்த பிப்.10ஆம் தேதி நெடுங்காயத்தில் ஏலம் விடப்பட்டன. ஒரு துண்டு ரூ.23 லட்சத்துக்கும், மற்ற துண்டுகள் ரூ.11, 5.25 லட்சத்துக்கும் என மொத்தமாக 39.25 லட்சம் ரூபாய் வரை ஏலம் போனது. மேலும், இதன் மூலம் அரசுக்கு 27% வரி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து மர விற்பனை அதிகாரி ஷெரீப் பனோலன் கூறுகையில், நாங்கள் இந்த மரத்திற்கு எதிர்பார்த்த விலையை விட அதிகமான விலை கிடைத்துள்ளதாகவும், நெடுங்காயம் டிப்போவிலிருந்து லாரிகளில் ஏற்றி திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த மரத்தின் பாகங்களை லாரிகளின் ஏற்றுவதை ஏராளமானோர் பார்வையிட்டனர். இதற்காக அஜீஷ் லாரி வாடகைக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வார்த்தை போர் எதிரொலி: இரு பெண் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!