புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்தக் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் காவல் துறையினர் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவலர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு பணியில் இருந்த காவல் துறையினர் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது மேலும் 11 காவலர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனம்!