பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் வரும் டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் "போத் மஹோத்சவ்" என்னும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வருகின்றனர். இதனிடையே கரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால் பீகாரின் கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து 4 வெளிநாட்டு பயணிகள் டிசம்பர் 20ஆம் தேதி கயா விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்பட்டதில் 4 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் அவர்கள் போத் கயாவில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதேபோல நேற்று முன்தினம் (டிசம்பர் 25) மற்றும் நேற்று (டிசம்பர் 26) 9 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பெண்களும் அடங்குவர். அனைவரும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவரும் நிலையில் 60,000 வெளிநாட்டு ஆன்மீக பயணிகள் கலந்துகொள்ளும் தலாய் லாமாவின் போதனை கூட்டம் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி