கர்நாடகா மாநிலம் பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேவுடாவுக்கு 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நவம்பர் மாதம் 11ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம், இந்த 108 அடி கெம்பேகவுடா சிலையை சுற்றிலும் 'தீம் பூங்கா’ அமைக்கப்படவுள்ளது. நமது வரலாற்றை மறந்தால் எதிர்காலம் மந்தமாகிவிடும். இதுபோன்ற சிலைகள் நாள்தோறும் வரலாற்றை நினைவு கூறும். புத்தர், பசவண்ணா, மகாவீரர் ஆகியோர் ஆன்மீகத்தை போதித்து, மக்கள் நலனுக்காக சீர்திருத்தங்கள் கொண்டு வந்தனர். ஆனால், கெம்பேகவுடா வாழ்க்கையே மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
அமெரிக்காவின் ’சுதந்திரச் சிலை’ சுதந்திரத்தைக் குறிக்கும், குஜராத்தில் ’ஒற்றுமையின் சிலை’ ஒற்றுமையைக் குறிக்கிறது, அதேபோல் இங்கே கெம்பேகவுடா சிலை ’செழுமையின் சிலை’ செழிப்பின் அடையாளமாகும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கற்றலை ஊக்குவிக்கும் காலை உணவு.. களத்தில் நிகழ்த்தும் மாற்றம் என்ன?