ETV Bharat / bharat

ஒரே சமயத்தில் 2 கைகளிலும் எழுதும் மாணவர்கள்!!

மாணவர்களுக்கு இரு வேளை உணவு, வேலைவாய்ப்பு கல்வி, அனைத்து மாணவர்களும் இரு கைகளிலும் எழுதும் தனித்திறன் உள்ளிட்ட திறமை கொண்ட ஜில்லா பரிஷத் பள்ளி பெற்றோர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

பல்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள்
பல்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள்
author img

By

Published : Dec 1, 2022, 7:03 AM IST

மகாராஷ்டிரா: நாசிக்கில் இருந்து 75 கி.மீ தொலைவில் திரிம்பகேஷ்வர் தாலுக்காவில் உள்ளது ஹிவாலி கிராமம். ஹிவாலி சுமார் 300 பேரை மட்டுமே கொண்டது. இங்குள்ள ஜில்லா பரிஷத் பள்ளி போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும் மாவட்டத்திற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

வருடத்தில் ஒரு விடுமுறை கூட இல்லாது 365 நாட்களும் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்களுக்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கற்பிக்கப்படுகிறது.

இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் 1000 வாய்ப்பாடுகள் பொது அறிவு, தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய அரசியலமைப்பு சட்டம், மற்றும் உலக நாடுகளின் தலைநகரங்கள் போன்றவற்றையும் இப்பள்ளியில் புத்தகத்தை பார்க்காமல் படிக்கின்றனர்.

மேலும் புத்தகத்தில் உள்ள பாடத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியும் இப்பள்ளியில் கற்பிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த பிளம்பர், ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர், பெயின்டிங் போன்ற படிப்புகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

1000 வாய்ப்பாடுகள், 2 கைகளிலும் ஒரே சமயத்தில் எழுதுதல் என பல்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்களுக்கு இரு வேளை பள்ளியில் உணவு வழங்கப்படுகிறது. மேலும் இப்பள்ளி மாணவர்கள் இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் புத்தகத்தின் இடது மற்றும் வலது பக்கங்களில் இரண்டு வெவ்வேறு பாடங்களை எழுதும் திறன் பெற்றுள்ளனர்.

பன்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள்
பன்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள்

மருத்துவர், ஐஎஸ் அதிகாரி, மற்றும் காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என பல்வேறு கனவுகளுடன் இப்பள்ளியில் 12 மணி நேரம் படித்து வருவதாக ஜில்லா பரிஷத் பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் இப்பள்ளி சிறப்பாக நடந்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: பிரியும் வாக்கு வங்கி.. ஓர் அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.