மும்பை: நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் மத்திய, மாநில அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதித்தல், கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்பட்டியலில், கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,067 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 406 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்தார். அத்துடன் மாநிலத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயில் கூட்ட நெரிசலில் 14 பேர் உயிரிழப்பு; தலா ரூ.12 லட்சம் நிவாரணம்