ETV Bharat / bharat

போர்த்துகீசிய கொள்கலன் கப்பலில் 10 கிலோ லிட்டர்எண்ணெய் கசிவு!

ஹால்டியாவுக்குச் செல்லும் போர்த்துகீசிய கொள்கலன் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து, இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

10 kiloliter oil spill
10 kiloliter oil spill
author img

By

Published : Jun 18, 2021, 4:42 PM IST

Updated : Jun 18, 2021, 4:50 PM IST

சென்னை: சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தூரத்தில் கடலில் எண்ணெய் கசிவு இருப்பதாக, கொழும்பு கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து (எம்.ஆர்.சி.சி) நேற்று முன்தினம் (ஜூன்.16), இந்திய கடலோர காவல்படைக்கு (ஐ.சி.ஜி) தகவல் கிடைத்தது.

இதுதொடர்பான உயர் மட்ட விசாரணையில், கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்குச் செல்லும் வழியில், எம்.வி.டெவன் என்ற போர்த்துகீசிய கொள்கலன் கப்பலின், எரிபொருள் தொட்டியில் (நீருக்கடியில்) விரிசல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதில், சுமார் 120 கிலோ லிட்டர், மிகக்குறைந்த சல்பர் எரிபொருள் எண்ணெய் இருந்தது.

தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர், சுமார் 10 கிலோ லிட்டர் எண்ணெய் கடலுக்குள் கசிந்ததால், தொட்டியில் மீதமுள்ள எண்ணெய்யை கப்பல் குழுவினர் மற்றொரு தொட்டிக்கு மாற்றினர்.

இந்தக் கப்பல் 382 கொள்கலன்களில் 10,795 டன் பொது சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளது. கப்பலில் 17 பணியாளர்கள் உள்ளனர்.

இந்த கப்பல் ஹால்டியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது, வெள்ளிக்கிழமை மாலை(ஜூன்.18) ஹால்டியாவை அடையும்.

இருப்பினும், இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி), எம்.ஜி.டெவோனுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், கப்பல் நிலையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டு குழு எச்சரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.

கூடுதலாக, ஐ.சி.ஜி கப்பல்கள் மற்றும் கடலில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 18, 2021, 4:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.