மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், லஹாவிட் (Lahavit)மற்றும் தேவ்லாலி (Devlali) இடையே சென்று கொண்டிருந்த, ஜெய்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தடம் புரண்டது.
ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில், பயணி ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலறிந்த ரயில்வே துறையினர் மீட்புப் பணிக்காக ஒரு ரயிலையும், மருத்துவக் குழுவையும் அனுப்பி வைத்துள்ளனர். ரயில்வே மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் தடம் புரண்டதால், அப்பாதையில் மூன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த மூன்று ரயில்களும் மாற்றுப் பாதைகளில் அனுப்பப்பட்டன. சம்பவ பகுதியில் ரயில்வே காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.