ETV Bharat / snippets

ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஈரோடு நகரமைப்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

லஞ்ச வழக்கில் கைதான நகரமைப்பு ஆய்வாளர்
லஞ்ச வழக்கில் கைதான நகரமைப்பு ஆய்வாளர் (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 10:40 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், கட்டிட அனுமதி வழங்க நகரமைப்பு பிரிவில் பணிபுரியும் நகரமைப்பு ஆய்வாளர் பெரியசாமி லஞ்சமாக ரூ.35 ஆயிரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து நாகராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ரசாயனம் தடவிய ரூ.35 ஆயிரம் பணத்தை பெற்ற போது நகர அமைப்பு ஆய்வாளர் பெரியசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், புதிய கட்டிட அனுமதி பெற விண்ணப்பித்த நபரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் பெற்று, கைதான நகரமைப்பு ஆய்வாளர் பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நகரமைப்பு ஆய்வாளர் பெரியசாமியிடம் துறை ரீதியான விசாரணை நடைபெறும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.