சென்னை: டிசம்பர் 2022 முதல் இன்றுவரை ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வீரராகவன், "தமிழகம் முழுவதும் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் 104 மாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த முறையில் பணி நியமனத்தை கைவிட்டு வாரிசுக்களுக்கு பணி வழங்க வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
டிசம்பர் 2022 முதல் இன்றுவரை ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும் அரசு தங்களுடைய கோரிக்கைகளை கேட்கவில்லையென்றால் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.