சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, நீதிபதி ஜி.ஜெயசந்திரன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தாக புகார் உள்ளதே, அதன் தற்போதைய நிலை என்ன? என தமிழக அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க ஆளுநரின் ஒப்புதல் பெற தமிழக அரசுத் தரப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு அனுமதி கோரப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை தனது விசாரணையை துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.