தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுந்தரம் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் குணசுந்தர் ஆகிய இரண்டு பேரும் ரௌடிகளுடன் தொடர்பில் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து அவர்களை கண்காணித்த உயர்மட்ட குழு உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர் குணசுந்தர் முக்கியமான ரவுடிகளாக கருதப்படும் ஏ ப்ளஸ் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி எஸ்பி ஆல்பட் ஜான் இருவரையும் கடந்த 13ஆம் தேதி ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில், தற்போது அவர்கள் இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.