கனடா: கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்து கோயிலில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்தியர்களுக்கு வாழ்நாள் சான்று வழங்கும் முகாம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கோயிலுக்குள் கொடிகளுடன் வந்த காலிஸ்தான் அமைப்பினர் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனால், இந்து கோயிலில் இருந்த இந்தியர்களுக்கும் காலிஸ்தான் அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், காலிஸ்தான் அமைப்பினர் கோயில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டொரண்டோவைச் சேர்ந்த லால் பானர்ஜி (57) என்பவரை, கனடா குற்றவியல் சட்டப் பிரிவு 319 (1) பொது வெறுப்பு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
Additional Arrests and Charges Following November 4 Demonstrations in Brampton.
— Peel Regional Police (@PeelPolice) November 8, 2024
Read More: https://t.co/ed7gKmPcW2#PRPVNR pic.twitter.com/aetXvGyBXS
இந்து கோயில்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது இந்து-கனடிய சமூகத்தினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பீல் பிராந்திய காவல்துறை அதிகாரி டைலர் பெல் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், பிராம்டன் பகுதி இந்து கோயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளன. வன்முறை மற்றும் குற்றங்கள் மீதான விசாரணையின் விளைவாக, போலீசார் ரணேந்திர லால் பானர்ஜியை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கனடாவில் இந்து கோவில் தாக்கப்பட்டற்கு பிரதமர், பஞ்சாப் முதல்வர் கண்டனம்!
மேலும், பீல் பிராந்திய போலீஸ் கிச்சனரைச் சேர்ந்த அர்மான் கஹ்லோட் (24)மற்றும் அர்பித்(22) ஆகிய இரு நபர்களுக்கு எதிராகவும், மிரட்டல் மற்றும் சதி செய்ததற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தீர விசாரணை மேற்கொள்ள புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்ததோடு, இத்தகைய தாக்குதல்களில் இருந்து வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்குமாறு கனடா அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், இந்து கோயிலில் நடந்த போராட்டத்தின் வீடியோக்களில் அடையாளம் காணப்பட்ட பீல் பிராந்திய போலீசார் சார்ஜென்ட் ஹரிந்தர் சோஹி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்