ETV Bharat / state

'பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரர்'... சீமானுக்கு விஜய் வாழ்த்து..! நெகிழ்ச்சியில் தவெக தொண்டர்கள்..! - VIJAY WISHES SEEMAN

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

சீமானுக்கு விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து
சீமானுக்கு விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2024, 2:18 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் கடந்த அக்.27-ம் தேதி விக்கிரவாண்டியில் ‘வெற்றி கொள்கைத் திருவிழா’ என்னும் பெயரில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய் பேசியவை இன்று வரையில் தமிழக அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

குறிப்பாக விஜய் தனது கட்சி கொள்கையை எடுத்துரைத்தபோது, '' பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி, திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் அரசியல் எதிரி.. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்பதே நமது கருத்து.. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. எக்ஸ்ட்ரா லக்கேஜாக நான் இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை'' எனக்கூறினார். அத்துடன், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்றும் விஜய் முழங்கினார்.

சீமான் விமர்சனம்: விஜயின் கட்சி கொள்கைகள் மற்றும் அவரது பேச்சு, அரசியல் கட்சிகளிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றன. குறிப்பாக நாம் தமிழர் சீமான் விஜயின் மாநாட்டுக்கு முன்பு அளித்து வந்த ஆதரவு போக்கை நிறுத்திவிட்டு, கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: கருணாநிதி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், '' திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கும் (திமுக) தெரியவில்லை. தமிழ் தேசியம் என்ன என்பது இவர்களுக்கும் தெரியவில்லை. ஒண்ணு ஆத்துல கால வை, இல்லன்னா சேத்துல கால வை. இரண்டிலும் கால் வைத்தால் என்ன அர்த்தம். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று, எங்கள் கண்ணு என்று கூறியதைக் கேட்டு பயந்துவிட்டேன். அடிப்படையே தவறு.. இது கொள்கை இல்லை கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. சாலையில் எந்த ஓரத்திலும் நிற்காமல் நடுவில் நின்றால் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ'' என்று கடுமையாக சாடி பேசியிருந்தார் சீமான்.

இதனால் நாம் தமிழர் மற்றும் தவெக ஆதரவாளர்களுக்கிடையே சோசியல் மீடியாவில் வார்த்தை போர், விவாதம் என மாறி மாறி கமெண்டிட்டு வருகின்றனர்.

விஜய் வாழ்த்து: இதற்கு மத்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (நவ.8) பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு விஜய் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் பதிவில், '' நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

அதுபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், '' நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நலவாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்'' என கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில், '' நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அன்புச் சகோதரருமான சீமானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சீமான் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் நடந்தது. அப்போது விஜய், சமூக வலைத்தளங்களில் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் பதிவிடுங்கள் எனவும் கட்சியினரை கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கும் அந்த பதிவுக்கு, தவெக தொண்டர்கள் நெகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.