தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு வெளிமாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயில் அருகில் இருக்கும் கடலில் புனித நீராடி மூலவர் சுவாமியை வழிபட்டுச் செல்வர். மேலும், விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு, இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனிடையே, இன்று (ஆக.18) காலையில் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. மேலும், அதிக அளவில் அலைகள் இல்லாமலும் காணப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கடற்கரை பணியாளர்கள் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தினர்.