தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு உள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பணம் கொடுக்கும் பொழுது ஏற்பட்ட தகராறில் எஸ்எஸ்ஐ காவேரி உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, ஷூவை கழற்றி தாக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதனை அடுத்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பெயரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், எஸ்எஸ்ஐ காவேரி, உணவகத்தில் தகாத முறையில் நடந்து கொண்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், எஸ்.எஸ்.ஐ காவேரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.