கோயம்புத்தூர்: கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, பெண் குழந்தைகளுக்கு தீபாவளிp பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா சரத்குமார், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது" என்று கூறினார்.
இதனை அடுத்து, சமத்துவ மக்கள் கட்சியின் கொடியின் வண்ணத்தைp போன்றே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் வண்ணம் இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மங்களகரமான நிறம் அது, விஜயும் அதே வண்ணத்தை பயன்படுத்தி இருப்பது நல்ல விஷயம். ஆனால், விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் ஒன் மேன் ஷோவாக காட்டியிருக்கிறார்" என்று கூறினார்.