தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கூலி வேலை செய்து வந்த இளைஞருக்கு மாலை 6 மணிக்கு மேல் பார்வை குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அந்த இளைஞர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ள 8 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர், அந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடு மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ராமலட்சுமி, இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்.