விருதுநகர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வழிபாடு செய்து வந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது விதிக்கப்பட்டது. குறிப்பாக
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.