ETV Bharat / snippets

ரூ.3.6 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு!

நடிகர் விமல்
நடிகர் விமல் (Credits - Vimal Instagram Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 9:51 PM IST

சென்னை: நடிகர் விமல், தனது ஏ3வி பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த "மன்னர் வகையறா" படத்துக்காக கோபி என்ற பைனான்சியரிடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 கோடியே 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த போதும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட வேண்டும் என திரைப்பட பைனான்சியர் கோபி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட விமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், கடன் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.