ETV Bharat / snippets

விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி..மடக்கி பிடித்த பேருந்து ஓட்டுநர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 8:40 AM IST

ஆம்பூர் நகர காவல்  நிலையம்
ஆம்பூர் நகர காவல் நிலையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், இது குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூரில் இருந்து 30 பயணிகளுடன் வேலூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து, ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த நிலையில், ஓசூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி பேருந்தின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றூள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுநர் சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியுடன் சென்று, லாரியை மடக்கி பிடித்து லாரி ஓட்டுநரை கீழே இறக்கி தாக்கியுள்ளார். தொடர்ந்து, அவரை ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.