சேலம்: சேலத்தில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதில், சேலம் மாநகர், குகை மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அதன் அருகில் இருந்த 5 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும், வீடுகளிலிருந்த உடைமைகளும் சேதமடைந்து உணவுப் பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினர்.
இந்நிலையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் இன்று சேதமைடந்த வீடுகளை பார்வையிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினர்.