ETV Bharat / snippets

மாட்டுத் தீவனத்தில் விஷம் கலந்த மர்ம நபர்.. 5 மாடுகள் உயிரிழப்பு!

மரணமடைந்த மாடுகள்
மரணமடைந்த மாடுகள் (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 10:36 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அன்னாண்டப்பட்டியைச் சார்ந்தவர் ராஜேந்திரன் (65). இவர் தனது மாடுகளை நேற்றிரவு தனது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் கட்டிவிட்டு, மாடுகளுக்கு தேவையான தீவனத்தை வேக வைத்துவிட்டு, வீட்டிற்கு உறங்கச் சென்றுள்ளார்.

பின்னர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேகவைத்த தீவனத்தை மாடுகளுக்கு சாப்பிட வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, 5 மாடுகளும் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து மாடுகளை பரிசோதித்த கால்நடை மருத்துவர், மாடுகள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து ராஜேந்திரன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.