திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கலூர் சிப்காட் பகுதியில் ஜன் பெயிண்ட்ஸ் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று தொழிற்சாலையில் திடீரென மின் கசிவு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், ஆபத்தான நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், மூன்று கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தொழிற்சாலை நிறுவனர் தெரிவித்துள்ளார்.