ETV Bharat / snippets

6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை கைது!

போக்சோவில் கைது தொடர்பான கோப்புப் படம்
போக்சோவில் கைது தொடர்பான கோப்புப் படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 4:30 PM IST

Updated : Aug 24, 2024, 4:58 PM IST

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தலையில் அடிபட்டதாக ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, சிறுமியை முழு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக அரசு குழந்தைகள் நல அலுவலர்களுக்கும், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் எழும்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், வடசென்னை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை அவரது தந்தை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

முதலில் இதை மறுத்த தந்தை, பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து,ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியுமான சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Last Updated : Aug 24, 2024, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.