ETV Bharat / snippets

விரைவில் நொச்சிக்குப்பம் மீன் சந்தை திறப்பு!

நொச்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் மீன் சந்தை
நொச்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டு வரும் மீன் சந்தை (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 5:16 PM IST

சென்னை: நொச்சிக்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால், கடந்தாண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் சாலையோரம் இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்றுவதற்கு உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நொச்சிக்குப்பம் மீனவ கிராம மக்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பாக நொச்சிக்குப்பம் பகுதியில் மீன் விற்பனை நிலையம் அமைத்துத் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதற்காக ரூ.9.97 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்ப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் கட்டிட வேலையைத் தொடங்கியது. சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் சந்தையில் 300க்கும் மேற்பட்ட மீன் விற்பனையாளர்கள் தங்கும் வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் வசதி ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன் சந்தை கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "அது முடிந்த கதை.." - இளையராஜா குறித்த கேள்விக்கு வைரமுத்து ‘நச்’ பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.