ETV Bharat / snippets

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியில் 400 லிட்டர் டீசல் அபேஸ்.. ஆம்பூர் அதிர்ச்சி சம்பவம்!

டீசல் திருடப்பட்ட லாரி
டீசல் திருடப்பட்ட லாரி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 4:26 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக லாரியில் இருந்து 400 லிட்டர் டீசல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நவசக்தி, இவர் சொந்தமாக லாரி வைத்திருக்கும் நிலையில், தனது லாரியின் மூலம் வெளிமாநிலங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்றும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று(ஜூலை 16) இரவு நவசக்தி, தனது லாரியை ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்திவிட்டு லாரியின் அருகிலேயே நவசக்தி உறங்கியுள்ளார்.

காலையில் தூங்கி எழுந்து லாரியை இயக்க முயன்ற போது டீசல் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் நவசக்தி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.