ETV Bharat / snippets

பண்ணாரி கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்.. கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் சொல்லாமல் திடீர் விசிட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 12:36 PM IST

பண்ணாரி கோயில் வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி
பண்ணாரி கோயில் வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீரென பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததோடு, சுமார் 10 நிமிடம் கோயில் வளாகத்தில் இருந்தார். அப்போது கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி, பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்த தகவல், பவனிசாகார் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள பண்ணாரிக்கு கூட தெரியாதாம், அவர் கோயியில் இருந்து சென்ற பின்னரே கட்சி நிர்வாகிகள் பலருக்கு இந்த விஷயம் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.