சீர்காழியில் குறுவை நடவு பணிகள் தீவிரம்; களைப்பு தெரியாமல் இருக்க வயலில் வைப் செய்யும் பெண்கள்! - women Singing while planting - WOMEN SINGING WHILE PLANTING
🎬 Watch Now: Feature Video
Published : May 22, 2024, 12:07 PM IST
மயிலாடுதுறை: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால், பருத்தி மற்றும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், திருப்பன்கூர், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. புங்கனூர் பகுதியில் நடவு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க, நாட்டுப்புற பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடி நடவு பணியில் ஈடுபட்டனர்.
இது அவ்வழியாக செல்வோரின் கண்களுக்கும், காதுகளுக்கும் நல்ல விருந்தாக அமைந்துள்ளது. வயலில் பெண்கள் பாட்டு பாடிக்கொண்டே நாற்று நடுவது குறித்த காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டிய தேனி சோத்துப்பாறை அணை.. மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! - Theni Sothuparai Dam