திம்பம் மலைப்பாதையில் நடமாடும் காட்டு யானை; வாகன ஓட்டுநர்கள், பயணிகள் அச்சம் - Wild elephants in road
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் ஒரு காட்டு யானை சாலை ஓரத்தில் அங்கும் இங்கும் நடமாடியது. யானை நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர்.
பேருந்து மற்றும் காரில் செல்லும் பயணிகள் காட்டு யானையை தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். திம்பம் மலைப்பாதையில் பகல் நேரங்களிலும், காட்டு யானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாகச் செல்லுமாறும், மலைப்பாதையில் செல்லும் போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.