குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் அச்சம்! - Wild elephants in Nilgiris - WILD ELEPHANTS IN NILGIRIS

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 8:55 PM IST

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

அந்த வகையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலும் தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தை நோக்கி யானைகள் படையெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதாலும், சமவெளிப் பகுதியில் அதிக வெயில் காணப்படுவதாலும் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து ஆறு காட்டு யானைகள் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் முகாமிட்டுள்ளது.

கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பெயரில், காட்டு யானைகள் சாலைக்கு வராமல் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.