புளியரை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் விவசாயிகள் அச்சம்! - Wild elephant in Tenkasi - WILD ELEPHANT IN TENKASI
🎬 Watch Now: Feature Video
Published : May 3, 2024, 9:17 PM IST
தென்காசி: தென்காசி மாவட்டத்தின் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள புளியரை அடுத்த பகவதிபுரம் ரயில் நிலையம் அருகே, கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த செங்கோட்டை வனத்துறை அதிகாரிகள், காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயற்சித்துள்ளனர்.
ஆனால், வனத்துறையினரின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அந்த ஒற்றை காட்டு யானை, அதே பகுதியில் முகாமிட்டுள்ளது, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஊருக்குள் புகுந்த காட்டு யானை நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனிநபரின் தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், கோடை காலம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.