தண்ணி தொட்டி தேடி வந்த யானை குட்டி நான்.. வைரல் வீடியோ! - elephant drinking water video - ELEPHANT DRINKING WATER VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : May 21, 2024, 7:00 PM IST
கோயம்புத்தூர்: தமிழகத்தில் கோடை மழை துவங்கிய நிலையில், கோவை, நீலகிரி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாள்தோறும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கோவையை ஒட்டியுள்ள மலைக்கிராமம் ஒன்றில் காட்டு யானைகள், சாரல் மழையில் நனைந்தபடியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை, தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஊரின் எல்லையில் வனவிலங்குகள், பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், அப்பகுதிக்கு குட்டிகளுடன் வந்த 6 காட்டு யானைகள் மழையில் நனைந்தவாறு, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்திவிட்டுச் சென்றுள்ளது. தற்போது, இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.