அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த மூதாட்டி..பணம் கொடுக்க முயன்ற அர்ஜுன் சம்பத்? - Arjun Sambath - ARJUN SAMBATH
🎬 Watch Now: Feature Video
Published : Mar 28, 2024, 3:21 PM IST
கோயம்புத்தூர்: கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக கோனியம்மன் கோயிலில் வழிபாடு செய்ய சென்றிருந்தார். அப்போது 1989 படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகரின் தாயார் கோயிலுக்கு வந்து இருந்தார். அவரிடம் அண்ணாமலை ஆசி பெற்ற போது, அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
அப்போது உடன் இருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தேர்தல் விதிமீறல் என மற்ற கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை “ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். குறைந்த செலவில் தேர்தல் நடந்த தொகுதியாக கோவையைக் காட்டுவேன்” என உறுதியளித்திருந்தார். அவரது இந்த கருத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில், அண்ணாமலைக்கு சால்வை அணிவித்த மூதாட்டிக்கு பணம் கொடுக்க முயன்ற அர்ஜுன் சம்பத்தின் வீடியோவை வெளியிட்டு மற்ற கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.