கும்பகோணம் வேங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் தெப்போற்சவம்.! ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்! - Venkatachalapathi Theppotsavam
🎬 Watch Now: Feature Video
Published : Feb 10, 2024, 8:30 AM IST
தஞ்சாவூர்: 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களில் சிறப்புடைய தலமாகவும் விளங்குவது கும்பகோணம் அருகேயுள்ள தென்னக திருப்பதி, திருவிண்ணகர் என போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாஜலபதி சுவாமி கோயில் ஆகும்.
இச்சிறப்பு பெற்ற வைணவத் தலத்தில் மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும், மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தை மாத திருவோணத்தை முன்னிட்டு, நேற்று (பிப்.9) இரவு பல வண்ண பட்டு வஸ்திரங்களாலும், பல வண்ண மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள் பொன்னப்பரும், பூமிதேவி தாயாரும் மங்கள வாத்தியங்கள் ழுழங்க, மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்ட பகலிராப்பொய்கை தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்த படி தெப்போற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தில் தாயாருடன் உலா வந்த பெருமாளைத் தரிசனம் செய்தனர். இந்த கோயிலில் உள்ள பெருமாளுக்கு எப்போதுமே உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.