"ராஜபக்சேவின் கதிதான் மோடிக்கும் வரும்" - வன்னியரசு விமர்சனம் - vck protest
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-03-2024/640-480-20998196-thumbnail-16x9-vck.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 16, 2024, 1:40 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வேலூர் மண்டல செயலாளர் ஒருங்கிணைப்பில், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்கள் வெற்றிகொண்டான் மற்றும் ஓம்பிரகாசம் என்கிற செஞ்சுடர் தலைமையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ (Citizenship Amendment Act, 2019) சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் கட்சின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய வன்னியரசு, 'குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செத்தாலும் விடமாட்டோம். சிறுபான்மையினருக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆகையால், இலங்கையில் ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலைமை தான், மோடிக்கும் ஏற்படும்' எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மோடி அரசு பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவருடைய நீலிக்கண்ணீரை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் வேலூர் மண்டல துணை செயலாளர் கோவேந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்தீபன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.