வீட்டு ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த லேப்டாப் திருட்டு.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Laptop theft cctv - LAPTOP THEFT CCTV

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 11:08 AM IST

சென்னை: ஆவடி அருகே உள்ள அசோக் நந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்குச் சென்று வீடு திரும்பிய சதீஷ், லேப்டாப், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை கீழ் தளத்தில் உள்ள அறையின் ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு மேல் தளத்திற்குச் சென்று உறங்கியுள்ளார்.

பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, லேப்டாப் மற்றும் பர்ஸில் வைத்திருந்த 1,000 ரூபாய் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ஆவடி காவல் நிலையத்தில் சதீஸ் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ரமணி தலைமையிலான போலீசார், குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், பூந்தமல்லி அருகே பதுங்கி இருந்த பட்டாபிராம், ஆயில்சேரியைச் சேர்ந்த சாரதி (20), ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த சந்துரு (20) ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர்கள், ஜன்னல் ஓரம் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை நைசாக திருடி உள்ளனர்.

மேலும் இதற்கு முன்னதாக மூன்றரை சவரன் தங்க நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள், ஐ போன் உள்ளிட்டவற்றைத் திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.