thumbnail

மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் சுற்றும் யானைகள்.. வைரலாகும் வீடியோ! - ELEPHANT VIDEOS

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 10:09 PM IST

தேனி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் உள்ள மாட்டுப்பட்டி அணை பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான இன்று கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்தனர்.

அப்போது, டாப் ஸ்டேஷனிலிருந்து மாட்டுப்பட்டி அணைக்குச் செல்லும் சாலை வழியில் எக்கோ பாயிண்ட் என்ற இடத்தில் இரண்டு காட்டு யானைகள் சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றித் திரிந்தும், அங்கிருந்த புற்களை தின்று கொண்டிருந்தது. யானைகள் அப்பகுதியில் சுற்றிவரும் காட்சியை அந்த சாலை வழியே சென்ற பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

மேலும், மாட்டுப்பட்டி அணைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்திவிட்டு யானை சுற்றித் திரியும் காட்சியை தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக ரசித்து தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல, பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணைப்பகுதியில் 10க்கும் மேலான யானைகள் குட்டிகளுடன் மீண்டும் உலா வரத் தொடங்கியுள்ளன. அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.