தேனி கும்பக்கரை அருவியில் சீரான நீர்வரத்து.. சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்! - Kumbakkarai falls open

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:28 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாகப் பெய்த கன மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதிக் கடந்த 2 நாட்களாக வனத்துறையினர் குளிக்கத் தடை விதித்தனர்.

இந்த நிலையில் நேற்று அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் இரண்டு நாட்களுக்குப் பின்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். ஆகையால், இன்று அதிகாலை முதலே கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்கச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

தற்போது அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் நீரில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.