மதுவிலக்கு, சமூக நலன், வீட்டுவசதி துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கை விவாதம் தொடங்கியது! - TN Assembly session 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 6:47 PM IST

Updated : Jun 21, 2024, 8:35 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று ஜூன் 20ஆம் தேதி கூடியது. முதல் நாளான நேற்று, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய உடன் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. காலை நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று மாலை மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை நேரலையில் காணலாம். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கீதாஜீவன் ஆகியோர் பதிலுரை ஆற்றி, துறைசார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். பேரவையின் மாலை அலுவல்களில் கேள்வி நேரம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
Last Updated : Jun 21, 2024, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.